ADDED : மார் 16, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணியாளர் மீது தாக்கு
இடைப்பாடி:இடைப்பாடி,
அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில், குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த
அம்மாசி, 45, துாய்மை பணியாளராக உள்ளார். நேற்று முன்தினம்
குஞ்சாம்பாளையம் ரேஷன் கடை அருகே குப்பையை அம்மாசி உள்ளிட்ட
பணியாளர்கள் அகற்றி, சாலையோரம் போட்டு தீ
வைத்தனர். அப்போது
அதே ஊரை சேர்ந்த கட்டட தொழிலாளி பிரகாஷ், 'இங்கு தீ வைத்து ஏன்
எரிக்கிறீர்கள்' என கேட்டு திட்டியுள்ளார். வாக்குவாதம் ஏற்பட,
அம்மாசி வயிற்றில், பிரகாஷ் கையால் குத்தியுள்ளார். அவர், இடைப்பாடி
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தேவூர்
போலீசார் பிரகாஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.