ADDED : மார் 16, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
சேலம்:சேலம், மணக்காட்டை சேர்ந்தவர் பிரபாகரன், 30. சேலம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்தார். 6 மாதங்களுக்கு முன், இவருக்கு ஸ்ரீதேவி என்பவருடன் திருமணமானது. நேற்று மதியம், பிரபாகரன் அம்மாபேட்டையில் இருந்து அணைமேடு மேம்பாலத்தில், 'பல்சர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார், பைக் பின்புறம் மோதியது. இதில் தடுமாறிய பிரபாகரன், தடுப்புச்சுவரில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.