/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஞ்சலகத்தில் படிவமில்லா பரிவர்த்தனை
/
அஞ்சலகத்தில் படிவமில்லா பரிவர்த்தனை
ADDED : மார் 16, 2025 02:16 AM
அஞ்சலகத்தில் படிவமில்லா பரிவர்த்தனை
சேலம்:சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக அறிக்கை: அஞ்சல் துறையில், படிவமின்றி பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர் அஞ்சலக கணக்கில் உள்ள ஆதார், மொபைல் எண், பான் கார்டு எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குதல், சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தல், எடுத்தல்(5,000 ரூபாய் வரை) உள்ளிட்ட முக்கிய பரிவர்த்தனைகளை, விரைவாக ஆதார் அடிப்படையில் எந்த படிவமின்றி கைரேகை மட்டும் வைத்து அஞ்சலகங்களில் மேற்கொள்ளலாம். இந்த வசதி சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள சேலம், ஆத்துார் தலைமை அஞ்சல் அலுவலகங்கள், அனைத்து துணை அஞ்சலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.