ADDED : மார் 18, 2025 02:06 AM
அ நிறம் | அளவு
தொழிலாளர் சங்கநிர்வாகிகள் தேர்வு
ஓமலுார்:-சேலம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம், புது நிர்வாகிகள் தேர்வு, வெண்ணங்குடி முனியப்பன் அருகே கடந்த, 15ல் நடந்தது. அதில் தலைவராக கனிவண்ணன், பொதுச்செயலராக சக்திவேல், பொருளாளராக பாண்டியராஜன், செயல் தலைவராக கிருஷ்ணவேனி உள்ளிட்ட நிர்வாக குழுவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சட்ட ஆலோசகர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, சென்னை தொழிற்தீர்ப்பாய வழக்குகளை, 6 ஆண்டுகளாக நடத்த விடமால், சாக்கு போக்கு சொல்லி, பல்கலை நிர்வாக தரப்பு வாய்தா வாங்கும் வழக்கத்தை கண்டித்தல் உள்பட, 7 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
