ADDED : மார் 18, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில், தி.மு.க., அரசு மற்றும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மும்மொழி திட்டத்திற்கு எதிராகவும், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மும்மொழி கல்வி கொள்கை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேற்கு மாவட்ட இணை செயலாளர் ஹரீஸ், பொருளாளர் தொல்காப்பியன் உட்பட பலர் பங்கேற்றனர்.