ADDED : மார் 19, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியை மீட்க ஆர்ப்பாட்டம்
சேலம்:சேலம், வீராணம் அருகே, 150 ஏக்கரில் உள்ள காரைக்காடு ஏரி மாசடைந்து காணப்படுகிறது. அந்த ஏரியை மீட்டெடுக்கக்கோரி, சேலம் பசுமை தாயகம் சார்பில், ஏரி பகுதி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை செயலர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அதில் மாவட்ட ஆலோசகர் நாராயணன், நிர்வாகி கோகுல கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.
.