ADDED : மார் 19, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் நடைமுறைகட்சியினர் ஆலோசனை
சேலம்:தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
அதில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தல், தொடர் திருத்த காலத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைப்பு செய்தல், புது ஓட்டுச்சாவடிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து கட்சி பிரமுகர்கள், மண்டல உதவி கமிஷனர்கள் வேடியப்பன், லட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.