நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தக்காளி விலை உயர்வு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தினசரி காய்கறி சந்தை மற்றும் தர்மபுரி உழவர் சந்தைக்கு தக்காளி, காய்கறிகள் தினமும் வரத்தாகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்ற நிலையில் நேற்று, 14 ரூபாய் என விற்பனையானது. இதேபோல், பல்வேறு காய்கறிகளின் விலையும் நேற்று அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ கத்திரிகாய், 14, வெண்டை, 18, அவரை, 38, பீட்ரூட், 24, பாகற்காய், 20 ரூபாய் என விற்பனையானது. நேற்று விலை உயர்ந்து கத்திரிகாய், 24, வெண்டை, 22, அவரை, 48, பீட்ரூட், 28, பாகற்காய், 24 ரூபாய் என விற்பனையானது.

