ADDED : ஏப் 05, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணிடம் தாலிபறித்தவர் கைது
காரிப்பட்டி:காரிப்பட்டி, கருமாபுரம் அருகே வெள்ளைக்குட்டை தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி, 49. இவர் கடந்த, 2ல் வீடு முன் இருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், கலைச்செல்வி அணிந்திருந்த, 3 பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றார்.
காரிப்பட்டி போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் விசாரித்ததில், மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த ராஜூ, 26, என்பதும், சேலம், குரங்குச்சாவடியில் கேட்டரிங் வேலை செய்வதும் தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்து தாலிக்கொடியை மீட்டனர்.

