/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கறுப்பு பேட்ஜூடன்இஸ்லாமியர் தொழுகை
/
கறுப்பு பேட்ஜூடன்இஸ்லாமியர் தொழுகை
ADDED : ஏப் 05, 2025 01:35 AM
கறுப்பு பேட்ஜூடன்இஸ்லாமியர் தொழுகை
ஓமலுார்:வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா, கடந்த, 2ல் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் ஓமலுாரில் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, முஹல்லா மசூதியில் நேற்று மதியம், கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். அதேபோல் அங்குள்ள செவ்வாய் சந்தை அருகே, ஜாமியா மசூதியிலும் தொழுகையில்
ஈடுபட்டனர்.இதுகுறித்து ஜாமியா மசூதி நிர்வாகி முகமது கூறுகையில், ''புது சட்டத்தில், பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை ஏற்க மாட்டோம். தமிழக அரசு எடுத்துள்ள முன்னெடுப்புகளை வரவேற்கிறோம். வக்ப் சொத்துகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என, எங்கள் முன்னோர் தெரிவித்துள்ளனர். அந்த வழியை பின்பற்றுவோம்,'' என்றார்.

