தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வளையல் அலங்காரத்தில்குருக்குப்பட்டி கருமாரியம்மன்

வளையல் அலங்காரத்தில்குருக்குப்பட்டி கருமாரியம்மன்

வளையல் அலங்காரத்தில்குருக்குப்பட்டி கருமாரியம்மன்


ADDED : ஏப் 08, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வளையல் அலங்காரத்தில்குருக்குப்பட்டி கருமாரியம்மன்

தாரமங்கலம்:தாரமங்கலம், குருக்குப்பட்டி கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த மார்ச், 25ல் கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரண்டாம் நாளான நேற்று இரவு 8:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மனை எழுந்தருள செய்து முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us