நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை நிலம் அளவீடு
இடங்கணசாலை:இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோவில் அடிவாரப்பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் சேலம் நெடுஞ்சாலை துறையினர், சில மாதங்களாக சேலம் - இளம்பிள்ளை பிரதான சாலை, ஸ்டீல் பிளாண்ட் சாலை ஆகியவற்றில், 100 மீ.,க்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தற்போது சென்டர் மீடியன் அமைத்தனர்.
ஆனால் சித்தர்கோவில் - மாட்டையாம்பட்டி சாலையில், 2 மீ., அகலத்துக்கு மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தொடர்ந்து முழு அளவில் ஆக்கிரமிப்பை அகற்ற, நெடுஞ்சாலை துறைக்கு புகார் சென்றது. இதனால் நேற்று காலை, 10:30 முதல் மதியம், 1:30 மணிவரை எர்ணாபுரம் குறுவட்ட அளவியலாளர்கள், 10க்கும் மேற்பட்டோர் சாலை புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து பெயின்டால் எல்லையை, 'மார்க்' செய்தனர்.

