நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி ஆசிரியை மாயம்
சேலம்:கோவை மாவட்டம் குனியமுத்துார், காந்தி நகரை சேர்ந்தவர் மொஹமத், 48. இவரது மகள் சபானா, 24. இவர், சேலம், குரங்குச்சாவடியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
கடந்த, 7ல் பள்ளிக்கு சென்ற அவர், பின் அவரது அறைக்கு திரும்பவில்லை. இதுகுறித்து மொஹமத்துக்கு தகவல் கிடைக்க, அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

