/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் பாருக்குடி.ஒய்.எப்.ஐ., எதிர்ப்பு
/
தனியார் பாருக்குடி.ஒய்.எப்.ஐ., எதிர்ப்பு
ADDED : ஏப் 10, 2025 02:17 AM
தனியார் பாருக்குடி.ஒய்.எப்.ஐ., எதிர்ப்பு
சேலம்:இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
முன்னதாக அவர்கள், காலி மதுபாட்டில்களை கையில் ஏந்தி, கழுத்தில் மாலையாக அணிந்து, ஊர்வலமாக வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பாட்டில்களை பறிமுதல் செய்து மனு அளிக்க அனுமதித்தனர்.
இதுகுறித்து பெரியசாமி கூறுகையில், ''உடையாப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நெடுஞ்சாலை ஓரம் செயல்படும் அக்கடையை அகற்றக்கோரி போராடி வருகிறோம்.
இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம், அதே பகுதியில் தனியார் பாருக்கு அனுமதி கொடுத்திருப்பது வேதனை,'' என்றார்.
மாநகர் தலைவர் கோபிராஜ், செயலர் விமல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

