/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் டிரைவர்களுக்குகமிஷனர் அறிவுரை
/
போலீஸ் டிரைவர்களுக்குகமிஷனர் அறிவுரை
ADDED : ஏப் 10, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீஸ் டிரைவர்களுக்குகமிஷனர் அறிவுரை
சேலம்:சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாகனங்கள் குறித்து கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர், டிரைவர்களிடம் கூறியதாவது: அதிவேகமாக வாகனங்களை இயக்க வேண்டாம். உரிய இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன் செல்ல வேண்டும். இதனால் விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணிய வேண்டும். இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து குற்றத்தடுப்பு கூட்டம் நடந்தது. அதில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க, பல்வேறு ஆலோசனைகளை, கமிஷனர் வழங்கினார்.