/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜாமினில் வந்தவர்தேடப்படும் குற்றவாளி
/
ஜாமினில் வந்தவர்தேடப்படும் குற்றவாளி
ADDED : ஏப் 15, 2025 01:55 AM
ஜாமினில் வந்தவர்தேடப்படும் குற்றவாளி
மல்லசமுத்திரம்:சேலம் மாவட்டம், களரம்பட்டி, நேதாஜி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சுரேஷ்குமார், 47; இவர், கடந்த, 2017 பிப்., 10ல், மல்லசமுத்திரம் அருகேயுள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த, காளிப்பட்டி, மதுரைவீரன் தெருவை சேர்ந்த ஆனந்தன், 42, என்பவரின் சட்டை பாக்கெட்டில் இருந்து, 200 ரூபாயை திருட முயன்றார். அப்போது கையும், களவுமாக மாட்டிக்கொண்டார். இதுகுறித்து புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்தனர். பின், ஜாமினில் வெளியே வந்த அவர், இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.