ADDED : ஏப் 15, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிழற்கூட பணி துவக்கம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு, கொல்லப்பட்டி முனியப்பன் கோவில் அருகே, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.