ADDED : ஏப் 16, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனியார் பாருக்கு எதிர்ப்பு
சேலம்:சேலம், உடையாப்பட்டி மக்கள், அஸ்தம்பட்டி மைய தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: உடையாப்பட்டி, 3 சாலை சந்திப்பில் ஏற்கனவே அரசு அனுமதி பெற்ற பார் இயங்கி வருகிறது. அங்கிருந்து, 100 மீட்டர் இடைவெளியில், தனியார் பார் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தால், சட்டம் - ஒழுங்கு சீர்கெடும். இவ்வாறு கூறினர்.
இதையடுத்து தாசில்தார் பார்த்தசாரதி பேச்சு நடத்தி, 'கலெக்டர் கவனத்துக்கு எடுத்துச்சென்று பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இதுதொடர்பாக கலால் அதிகாரியிடம் புகார் அளித்தால் மேல் நடவடிக்கை தொடரும்' என்றார். இதையேற்று மக்கள் கலைந்து சென்றனர்.

