தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு


ADDED : மே 04, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (நெக்) நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 470 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 480 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடும் வெப்பம் காரணமாக, முட்டை உற்பத்தி, 15 சதவீதம் சரிந்துள்ளது. அதனால், தமிழகம், கேரளாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்தில், 70 காசு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 530, ஐதராபாத், 445, விஜயவாடா, 470, பர்வாலா, 434, மும்பை, 510, மைசூரு, 515, பெங்களூரு, 495, கோல்கட்டா, 495, டில்லி, 458 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டைக்கோழி ஒரு கிலோ, 89 ரூபாய், கறிக்கோழி ஒரு கிலோ, 96 ரூபாய் என, எந்த மாற்றமும் செய்யாமல், பழைய விலையே நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us