தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விவசாயி மர்ம சாவு

விவசாயி மர்ம சாவு

விவசாயி மர்ம சாவு


ADDED : செப் 09, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம், சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி மிட்டாகாடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், 65, மனைவி பெருமாயி அம்மாள். இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில், மகன்களுக்கு திருமணம் ஆகவில்லை. இவர், 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

கடந்த, 18ல் வீட்டில் செல்லப்பன் துாங்கி கொண்டிருந்தபோது, அவர் மீது மின்விசிறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து, தலையில் 16 தையல் போடப்பட்டது. சிகிச்சை பெற்ற அவர், வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம், தனது நண்பருடன் மது அருந்தி விட்டு வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் படுத்துள்ளார். நேற்று காலை அவரது மனைவி பெருமாயி அம்மாள் பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மூளை சிதறி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சூரமங்கலம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்லப்பன் மது அருந்திய நிலையில் இறந்தாரா அல்லது யாராவது அடித்து கொலை செய்தார்களா என, அந்த பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us