நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்,மேட்டூரை சேர்ந்தவர் செந்தில்குமார், 27. இவரது மனைவி கற்பகம், 24. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 23ல், இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, பெற்றோர் வீடான,
தலைவாசல், சிறுவாச்சூருக்கு, கற்பகம் வந்தார். பின் தலைவாசல் சென்று வருவதாக கூறி புறப்பட்ட கற்பகம் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கற்பகத்தின் தாய் மாரியம்மாள் புகார்படி, தலைவாசல் போலீசார் தேடுகின்றனர்.