ADDED : ஏப் 09, 2026 04:50 AM
நாமக்கல், நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 405 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 415 காசாக
நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டல முட்டைவிலை(காசுகளில்) நிலவரம்: சென்னை, 470, ஐதராபாத், 420, விஜயவாடா, 460, பர்வாலா, 455, மும்பை, 480 மைசூரு, 460, பெங்களூரு, 455, கோல்கட்டா, 520, டில்லி, 490 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, முட்டைக்கோழி, 75 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, கறிக்கோழி, 98 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
