ADDED : ஏப் 25, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
ஆத்துார், தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கில் உள்ள மாருதி பாலிடெக்னிக் வளாகம், ஆத்துார், கெங்கவல்லி தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையமாக உள்ளது.
அங்கு நேற்று, ஆத்துார், கெங்கவல்லி தொகுதி களுக்கு தனித்தனியே வேட்பாளர்கள், முகவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை, தேர்தல் அலுவலர்கள் நடத்தினர்.
தேர்தல் பொது மேற்பார்வையாளர் அசோக்கரஜ்கர், ஓட்டுச்சாவடி மையங்களில் பழுதான ஓட்டு இயந்திர விபரங்கள், மாற்றி அமைக்கப்பட்ட ஓட்டு இயந்திர எண்ணிக்கை, ஒவ்வொரு தொகுதிகளிலும் மொத்த ஓட்டு, பதிவான ஓட்டுகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து வேட்பாளர்களிடம், ஓட்டு எண்ணும் நாளில் மேற்கொள்ளும் பணி குறித்து பேசி, வேட்பாளர்கள், முகவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
