sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கம்மங்கூழ் வியாபாரியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

/

கம்மங்கூழ் வியாபாரியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

கம்மங்கூழ் வியாபாரியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

கம்மங்கூழ் வியாபாரியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது


ADDED : ஜூலை 13, 2011 03:24 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்டில், கம்மங் கூழ் விற்பனை செய்யும் வியாபாரியிடம், 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மாநகராட்சி பில் கலெக்டரை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் அம்மாசி.

இவரின் மகன் சகாதேவன்(40). இவர் சேலம் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் கம்மங்கூழ் கடை நடத்தி வருகிறார். புது பஸ் ஸ்டாண்டில் கம்மங் கூழ் நடத்த வேண்டும், எனில் தனக்கு லஞ்சமாக தினமும், 200 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என, மாநகராட்சி பில் கலெக்டர் விஜயன் கேட்டு உள்ளார்.தன் தொழிலை புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் நடத்த வேண்டும் என்பதற்காக தினம் தோறும், 200 ரூபாய் வழங்கி வந்த சகாதேவன், பின்னர் வாரத்துக்கு, 1,000 ரூபாய் லஞ்சமாக வழங்கி வந்துள்ளார்.இந்நிலையில், சகாதேவனின் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், மருத்துவ செலவு அதிகரிக்கவே, சகாதேவனால் வாரம், 1,000 ரூபாய் வழங்க இயலவில்லை.தன் நிலையை பில் கலெக்டர் விஜயனிடம் தெரிவித்து உள்ளார். ஆனால், அவர் பணம் தராத ஆத்திரத்தில் தன்னுடன், லெட்சுமணன் என்பவரை சேர்த்துக் கொண்டு, சகாதேவனை தாக்கியதோடு, அவரின் தள்ளுவண்டி கடையில் வைத்து இருந்த கம்மங்கூழ் பானை உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த சகாதேவன், இது குறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சந்திரமவுலியிடம் தெரிவித்துள்ளார். அவரின் ஆலோசனையின் படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழங்கிய பணத்தை சகாதேவன், நேற்று புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பில் கலெக்டர் விஜயனிடம் வழங்கினார்.மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சந்திரமவுலி, இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், நடராஜ், ரெங்கராஜன், செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் விஜயனை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும், அவரிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழங்கப்பட்ட பவுடர் தடவிய பணத்தையும் கைப்பற்றி, அவர் லஞ்சம் வாங்கியதை உறுதி செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us