ADDED : மார் 30, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
அம்மாபேட்டை ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ஆசைதம்பி, 70. நேற்று
முன்தினம் மதியம், அதே பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த சிறுவர்கள், அவரது சட்டைப்பாக்கெட்டில்
இருந்த, 4,800 ரூபாய், அவரது மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
அதேபோல் அம்மாபேட்டை, பெரியகிணறு பகுதியை சேர்ந்த மணி, 53,
என்பவரிடம், 950 ரூபாய், மொபைல் போனை பறித்துள்ளனர்.
இதுகுறித்து
ஆசைதம்பி, மணி அளித்த புகார்களின்படி, அம்மாபேட்டை போலீசார்
விசாரித்ததில், பொன்னம்மாபேட்டை, பெரிய கிணறு தெருவை சேர்ந்த, 3
சிறுவர்கள், வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த
போலீசார், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். அவர்களிடம்
இருந்த பணம், மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.
