/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டின் பூட்டை உடைத்துரூ.30 ஆயிரம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்துரூ.30 ஆயிரம் திருட்டு
ADDED : ஏப் 08, 2025 01:53 AM
வீட்டின் பூட்டை உடைத்துரூ.30 ஆயிரம் திருட்டு
ஆத்துார்:தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், ஒரு பவுன், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.
ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் அண்ணா தெருவை சேர்ந்த சின்ராஜ் மகன் ரமேஷ், 40. கட்டடத் தொழிலாளியான இவர், இரு தினங்களுக்கு முன், குடும்பத்தினருடன் திருவாரூர் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றார். நேற்று, வீட்டின் வெளிப்புற கதவு உடைந்திருப்பது கண்டு வீட்டின் உரிமையாளர் பாபுவுக்கு, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
தொழிலாளி ரமேஷூக்கு தகவல் தெரிவித்து, வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தோடு, மூக்குத்தி உள்பட ஒரு பவுன், 30 ஆயிரம் ரூபாய், வெள்ளி அரைஞாண் கயிறு, வெள்ளி கொலுசு ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசார், வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

