sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் போலீஸ் "அலர்ட்'

/

சேலத்தில் போலீஸ் "அலர்ட்'

சேலத்தில் போலீஸ் "அலர்ட்'

சேலத்தில் போலீஸ் "அலர்ட்'


ADDED : ஜூலை 14, 2011 01:37 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மும்பையில் நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, நேற்று சேலம் மாநகர போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மும்பை சவேரிபரார், தாதர் பஸ் ஸ்டாண்ட், ஓபெரா ஹவுஸ் ஆகிய மூன்று இடங்களில், நேற்று இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில், 17 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சேலம் மாநகரில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், நேற்று இரவு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சேலம் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஜாமியா மஜித், குழந்தை இயேசு பேராலயம், சுகவனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகர ரோந்து பணியில், கூடுதல் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். சந்தேகப்படும்படியான நபர்களிடம், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்வதோடு, தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.








      Dinamalar
      Follow us