/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாரச்சந்தை ஏலம்5ம் முறை ஒத்திவைப்பு
/
வாரச்சந்தை ஏலம்5ம் முறை ஒத்திவைப்பு
ADDED : மார் 15, 2025 02:43 AM
வாரச்சந்தை ஏலம்5ம் முறை ஒத்திவைப்பு
தாரமங்கலம்:தாரமங்கலம் வாரச்சந்தை, வண்டிப்பேட்டை சுங்க வசூல் ஏலம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் காஞ்சனா தலைமை வகித்தார். வண்டிப்பேட்டை சுங்க வசூல் ஓராண்டுக்கு, 6.54 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். வாரச்சந்தை ஏலத்தொகை, 20.30 லட்சம் ரூபாய் என, நகராட்சி நிர்ணயித்து ஏலத்தை தொடங்கியது.
ஆனால் ஏலதாரர்கள், 10.10 லட்சம் ரூபாய்க்கு கேட்டனர். இதனால் அதிகாரிகள், வாரச்சந்தை ஏலத்தை ஒத்திவைத்தனர். அதேபோல் வாரச்சந்தை ஏலம், ஏற்கனவே, 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது, 5ம் முறை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் நகராட்சி பணியாளர்கள் வாரச்சந்தை சுங்கம் வசூலித்து
வருகின்றனர்.