ADDED : ஜன 30, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உரக்கடையில்ரூ.50,000திருட்டு
தலைவாசல்:தலைவாசல் அருகே இலுப்பநத்தத்தை சேர்ந்தவர் சரவணன், 30. வேப்பம்பூண்டி நடுமேடு பகுதியில் உரக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை திறக்கவந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, டிராவில் இருந்த, 50,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து, சரவணன் புகார்படி வீரகனுார் போலீசார்  விசாரிக்கின்றனர்.

