/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு மேல்நிலைப்பள்ளி60ம் ஆண்டு வைர விழா
/
அரசு மேல்நிலைப்பள்ளி60ம் ஆண்டு வைர விழா
ADDED : பிப் 20, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு மேல்நிலைப்பள்ளி60ம் ஆண்டு வைர விழா
தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே, டி.கோணகாபாடி அரசு மேல்நிலைப்பள்ளியின், 60ம் ஆண்டு வைர விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை ரேவதி தலைமை வகித்தார். இதில் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்கள் பழைய நினைவுகளை பேசினர். தொடர்ந்து பழைய நினைவுகள் மலரும்படி அமைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதியத்துக்கு பின், மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமி, பள்ளி மேலாண் குழு தலைவி பூங்கொடி, ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.