/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தட்டச்சு தேர்வு7,500 பேர் பங்கேற்பு
/
தட்டச்சு தேர்வு7,500 பேர் பங்கேற்பு
ADDED : மார் 02, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தட்டச்சு தேர்வு7,500 பேர் பங்கேற்பு
சேலம்:தமிழகத்தில் அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் பிப்ரவரி, ஆகஸ்டில், இளநிலை, முதுநிலை தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அரசு பணிக்கான வாய்ப்பு என்பதால், தட்டச்சு தேர்வில் ஏராளமானோர் ஆர்வம் காட்டி, பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன் நடப்பாண்டு தேர்வுக்கு, சேலம் தியாகராஜா, சி.எஸ்.ஐ., கொங்கு, சேலம் பாலிடெக்னிக்குகள், மேச்சேரியில் காவேரி, வனவாசியில் அரசு பாலிடெக்னிக்குகளில் மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று தேர்வு நடந்தது. அதில் தமிழ், ஆங்கிலம், இளநிலை, முதுநிலை தேர்வுகளில், 7,500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.