ADDED : ஏப் 05, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பறிமுதல் வாகனங்கள்வரும் 8ல் ஏலம்
சேலம்:சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிக்கை:மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 12 இருசக்கர வாகனங்கள், ஏப்., 8ல் ஏலம் விடப்பட உள்ளது. முன்னதாக, சூரமங்கலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு வளாகத்தில், ஏப்., 6 காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, வாகனங்களை பார்வையிடலாம்.
ஏலம் எடுப்போர், 8 காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு வளாகத்தில், முன்பணம், 5,000 செலுத்த வேண்டும். ஏலம் எடுத்ததும், அத்தொகையுடன், ஜி.எஸ்.டி., முழுதும் செலுத்தி, அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். விபரங்களுக்கு, 94981 02546 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.