/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமுதாய அமைப்பாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
சமுதாய அமைப்பாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 20, 2024 03:09 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இடைப்பாடி, மேட்டூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் மூன்று சமுதாய அமைப்பாளர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர். நியமனமாகும் சமுதாய அமைப்பாளர்கள் வெளிச்சந்தை முறையில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவர். வயது 35க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி ஏதேனும் ஒருபாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, அடிப்படை கணினி திறன்களுடன் நல்ல பேச்சுத்திறன் இருப்பது அவசியம்.
களப்பணியில் ஓராண்டு முன் அனுபவம், பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை நேரில் அல்லது தபால் மூலமாக மேலாளர், சூரமங்கலம், நகர்புற வாழ்வாதார மையம், அறை எண்: 207, 2வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம்,சேலம். 636001. என்கிற முகவரிக்கு வரும் 30, மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.