/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
170 கர்ப்பிணிக்கு சமுதாய வளைகாப்பு விழா
/
170 கர்ப்பிணிக்கு சமுதாய வளைகாப்பு விழா
ADDED : பிப் 27, 2025 03:46 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி ஒன்றிய சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, ஒருங்-கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், கூடமலையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது.
தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது கூடமலை, ஆணையாம்பட்டி, 74.கிருஷ்ணாபுரம் உள்பட, 14 கிராமங்களை சேர்ந்த, 100 கர்ப்பிணியருக்கு வளையல், தட்டு, மஞ்சள் தாலிக்க-யிறு உள்பட, 9 வகை பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேங்காய், புளி, எலுமிச்சை, தயிர், தக்காளி என, 5 வகை சாதங்கள், இனிப்புகள் வழங்கி ஆசீர்வாதம் வழங்கினர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, தி.மு.க., ஒன்-றிய செயலர் சித்தார்த்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் தாரமங்கலம் வட்டாரத்தில், தெற்கு ரத வீதியில் விழா நடந்தது. அதில், தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பத்மபிரியா, கர்ப்பிணியருக்கு அறிவுரை வழங்கினார். பின் 70க்கும் மேற்பட்ட கர்ப்பிணியருக்கு சந்தனம் வைத்து, வளையல் அணிவித்து, சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டன.
அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. நகராட்சி தலைவர் குணசேகரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் யசோதா உள்ளிட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்