நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி
அருகே குள்ளப்பநாயக்கனுாரை சேர்ந்த கார் டிரைவர் சங்கர் கணேஷ், 35.
கடந்த, 30 இரவு குரால்நத்தத்தில் பணப்பிரச்னையில் ஏற்பட்ட தகராறில்
தாக்கப்பட்டார். அவர் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், சேலம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பனமரத்துப்பட்டி போலீசார்
கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரது நண்பர்கள் நவநீதன், 40,
வெங்கடேஷ், 27, பிரபு, 47, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மருத்துவமனையில் நேற்று சங்கர் கணேஷ் உயிரிழந்தார். இதனால் கொலை
வழக்காக மாற்றி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.