/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கவுன்சிலர்கள் போராட்டம்; இ.ஓ., போட்டி உண்ணாவிரதம்' காமெடி களமான ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகம்
/
'கவுன்சிலர்கள் போராட்டம்; இ.ஓ., போட்டி உண்ணாவிரதம்' காமெடி களமான ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகம்
'கவுன்சிலர்கள் போராட்டம்; இ.ஓ., போட்டி உண்ணாவிரதம்' காமெடி களமான ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகம்
'கவுன்சிலர்கள் போராட்டம்; இ.ஓ., போட்டி உண்ணாவிரதம்' காமெடி களமான ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகம்
ADDED : ஆக 14, 2024 02:46 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு போட்டி-யாக, செயல் அலுவலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்-டுகள் உள்ளன. தி.மு.க.,வின் லட்சுமி தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் மன்ற கூட்டம் நடந்தது. அதில், 17 தீர்மா-னங்கள் வாசிக்கப்பட்டன. இதில், 14 தீர்மானங்களுக்கு, பத்து கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ''அனைத்து தீர்மானங்க-ளையும் நானே நிறைவேற்றுவேன். கவுன்சிலர்கள் ஆதரவு தேவையில்லை,'' என செயல் அலுவலர் சோமசுந்தரம் பேசினார். இதனால் செயல் அலுவலர், கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனாலும், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி, தலைவர் மற்றும் செயல் அலுவலர், ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்கள் வெளியேறினர். மெஜாரிட்டி இல்லாத தீர்மானங்-களை செயல் அலுவலர் தன்னிச்சையாக நிறைவேற்றியதை கண்-டித்து, 1௦ கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர். இரவிலும் மன்ற அரங்கில் போராட்டத்தை தொடர்ந்தனர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இவர்க-ளுக்கு போட்டியாக, செயல் அலுவலர் சோமசுந்தரம், உண்ணாவி-ரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார், மாவட்ட டவுன் பஞ்., துணை இயக்குனர் குருராஜன் ஆகியோர், இரு தரப்பிடமும் விசாரணை நடத்தினர். மெஜாரிட்டி இல்லாத தீர்மா-னங்களை ரத்து செய்ய, டவுன் பஞ்., துணை இயக்குனர் குரு-ராஜன் உத்தரவிட்டதால், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்-டத்தை, மதியம் முடித்துக்கொண்டனர். தொடர்ந்து செயல் அலு-வலரும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
இதுகுறித்து செயல் அலுவலர் கூறும்போது, ''நான் இங்கு பணிக்கு சேர்ந்தது முதல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் 'டார்ச்சர்' கொடுக்கின்றனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு-பட்ட கவுன்சிலர்கள், மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக என்னிடம் தெரிவித்ததால், அந்த அனுபவத்தை உணர நானும் உள்ளிருப்பு போராட்டம் செய்து, உண்ணாவிரதம் இருந்தேன்,'' என்றார்.