/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
6 டன் பறிமுதல் சந்தன கட்டையை அரசுடைமையாக்க கோர்ட் உத்தரவு
/
6 டன் பறிமுதல் சந்தன கட்டையை அரசுடைமையாக்க கோர்ட் உத்தரவு
6 டன் பறிமுதல் சந்தன கட்டையை அரசுடைமையாக்க கோர்ட் உத்தரவு
6 டன் பறிமுதல் சந்தன கட்டையை அரசுடைமையாக்க கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 25, 2024 07:39 AM
சேலம்: புதுச்சேரியில் பறிமுதல் செய்த, 6 டன் சந்தன கட்டையை அரசு-டைமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரக வனத்துறையினர், சந்தன கட்டை கடத்தல் வழக்கில், கேரளாவை சேர்ந்த முகமது சுகைல் உள்பட ஆறு பேரை, கடந்த ஜூனில் கைது செய்தனர். இதில் நான்கு பேரை காவலில் எடுத்து வனத்துறையினர் விசாரித்தனர்.
இதையடுத்து புதுச்சேரி, வில்லியனுார் அருகே ஒரு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 6 டன் சந்தன கட்டைகளை பறி-முதல் செய்து, சேலம் கொண்டு வந்தனர். இதை தங்களிடம் திரும்ப வழங்குமாறு அந்த ஆலை தரப்பில் சென்னை உயர்நீதி-மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்-றத்தில், சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் செய்த மனுவில், 'பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டை, தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதிகளில் வெட்டப்பட்டவை. அவற்றை திரும்பி வழங்க கூடாது. வழக்கு மேல் விசாரணை நடக்கிறது' என கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் வழக்கு விசார-ணைக்கு வந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட, 6 டன் சந்தன கட்-டைகளை அரசுடைமையாக்க, சேலம் மாவட்ட வனத்துறைக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

