/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிக்னல் கிடைக்காமல் திரும்பிய டிரோன் மழையால் நாய்களை மீட்பதில் தொய்வு
/
சிக்னல் கிடைக்காமல் திரும்பிய டிரோன் மழையால் நாய்களை மீட்பதில் தொய்வு
சிக்னல் கிடைக்காமல் திரும்பிய டிரோன் மழையால் நாய்களை மீட்பதில் தொய்வு
சிக்னல் கிடைக்காமல் திரும்பிய டிரோன் மழையால் நாய்களை மீட்பதில் தொய்வு
ADDED : ஆக 07, 2024 01:56 AM
மேட்டூர்மேட்டூர் அணை, 16 கண் மதகில் வெளியேறும் உபரிநீர் சூழ்ந்த நிலையில், அதன் மையப்பகுதியில் உள்ள கரட்டில், 7 தெருநாய்கள் வெளியே வர முடியாமல் ஒரு வாரமாக சிக்கியுள்ளன. சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துச்செல்வதால் தீயணைப்பு, மீட்பு குழுவினரால் நாய்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
நேற்று சென்னை தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நாய்களை மீட்க பெரிய டிரோன் வரவழைக்கப்பட்டது. அக்குழுவினரும் மாலை, 4:00 மணிக்கு வந்தனர். அவர்கள் டிரோனில் உள்ள கூண்டில் சில்லி சிக்கன் வைத்தனர். அந்த கூண்டு, டிரோன் மூலம் பறக்கவிடப்பட்டது.
அங்கு வரும் நாய்கள் சில்லி சிக்கனை சாப்பிடும் போது கூண்டில் சிக்கும் என, தொழில்நுட்ப குழுவினர், தீயணைப்பு, மீட்பு குழுவினர், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர்.
ஆனால் டிரோன், நாய் இருக்கும் பகுதிக்கு மேலே சென்றது. போதிய சிக்னல் கிடைக்காததால் கீழே இறங்கவில்லை. டிரோன் வருவதை பார்த்த நாய்கள் கூட்டம், சிக்கன் சாப்பிடும் ஆசையில் அப்பகுதிக்கு வந்தன. ஆனால் டிரோன் கூண்டை, அங்கு நிலை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது. அப்போது மழையும் குறுக்கிட, மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்று நாய்களை மீட்கும் பணி தொடங்கும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.