/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் மோட்டார் பழுது தண்ணீரின்றி மக்கள் அவதி
/
மின் மோட்டார் பழுது தண்ணீரின்றி மக்கள் அவதி
ADDED : செப் 01, 2024 03:30 AM
இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி சித்தர்கோவில், மன்னாதகவுண்-டனுார், ரெட்டியூர், கொசவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு சித்தர்கோவில், முனியப்பன் கோவில் அருகே உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
ஒரு மாதத்துக்கு முன் மின்மோட்டார் பழுதாகி வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மக்கள் புகாரளித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் போதிய தண்ணீ-ரின்றி மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து இடங்கணசாலை செயற்பொறியாளர் ஜெயலஷ்மி கூறுகையில், ''மோட்டார் பழுதுபார்ப்பு பணி நடக்கிறது. விரைவில் தண்ணீர் பிரச்னை தீரும்,'' என்றார்.