/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் வாசகர் வட்டம் துவக்கம்
/
ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் வாசகர் வட்டம் துவக்கம்
ADDED : ஆக 13, 2024 08:00 AM
சேலம்: சேலம் ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில், நேற்று மாணவர்களுக்கான வாசகர் வட்டம் துவங்கப்பட்டது.
பள்ளியின் முதல்வர் பால் பிரான்சிஸ் சேவியர், வாசகர் வட்-டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
இன்று மாணவர்களை கல்வி கற்பதிலிருந்து, மொபைல் போன்கள், சமூக வலைதளங்கள், 'டிவி' உள்ளிட்டவை பின்-னுக்கு இழுக்கின்றன. இவற்றை தவிர்க்க ஒரே வழி, வாசிப்பதில் ஆர்வம் ஏற்படுத்துவதுதான். மாணவர்களுக்கு புத்தகங்களை, நாளிதழ்களை வாசிப்பதில் ஏற்படும் சுவாரஸ்யம், படிப்பின் மீது கவனம் செலுத்த உதவும். பள்ளி நுாலகத்தில், 9,000 புத்தகங்கள் உள்ளன. மேலும் காலைக்கதிர் 'பட்டம்' மாணவர் இதழ்கள் உள்-ளன.தினம் தினம் புதிய தகவல்களுடன், மொழியை பிழை-யின்றி, எழுத படிக்கவும் தெரிந்து கொள்ள முடியும். பள்ளியில் இருப்பதை போன்ற சூழ்நிலையை, பெற்றோர் வீட்டிலும் ஏற்ப-டுத்தி கொடுத்தால், படிப்பில் சாதனை புரிய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்னபூ-ரணி, எழிலரசி, நுாலகர் சண்முகப்பிரியா மற்றும் மாணவ, மாண-விகள் விழாவில் பங்கேற்றனர்.

