/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
8ம் வகுப்பு உதவித்தொகை தேர்வு 17ல் 'ஹால் டிக்கெட்' வழங்கல்
/
8ம் வகுப்பு உதவித்தொகை தேர்வு 17ல் 'ஹால் டிக்கெட்' வழங்கல்
8ம் வகுப்பு உதவித்தொகை தேர்வு 17ல் 'ஹால் டிக்கெட்' வழங்கல்
8ம் வகுப்பு உதவித்தொகை தேர்வு 17ல் 'ஹால் டிக்கெட்' வழங்கல்
ADDED : பிப் 15, 2025 05:45 AM
என்.எம்.எம்.எஸ்., எனும், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவி தேர்வு, நடப்பு ஆண்டு மாணவர்களுக்கு, வரும், 22ல் நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்'டுகளை, வரும், 17ல் பதிவிறக்கம் செய்து வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வு துறை இணை இயக்குனர் ராமசாமி, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
என்.எம்.எம்.எஸ்., தேர்வு மைய பொறுப்பாளர்கள், மாணவர் பெயர் பட்டியலை, பிப்., 17ல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள், பள்ளி யூசர் ஐ.டி., பாஸ்வேர்ட் பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்கி, தேர்வு மைய விபரங்களை தெரிவிக்க வேண்டும். நுழைவு சீட்டுகளில் பெயர், பிறந்த தேதி, வகுப்பினம் ஆகியவற்றில் திருத்தம் இருப்பின், சிறப்பு நிற மையால் குறிப்பிட்டு, சான்றொப்பம் அளித்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
- நமது நிருபர் -