/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல் இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'
/
பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல் இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'
பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல் இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'
பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல் இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 06, 2024 06:54 AM
சேலம் : சேலம், கோட்டையில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக கிரிதரன் பணியாற்றினார். அவர் ஆசிரி-யர்களின் சம்பளம், ஊக்க ஊதியம், தேர்வு நிலை ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை பெற்றுத்தரும் பணியை மேற்கொள்கிறார். அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, கடந்த, 1ல் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
முதுநிலை ஆசிரியர், 2 பேருக்கு தேர்வுநிலை ஊதியம் பெறுவ-தற்கு வழங்கப்பட்ட, அதே ஆணையில் கிரிதரன், அவரது வங்கி கணக்கை இணைத்துள்ளார். இதற்கு அவசரமாக தலைமை ஆசிரி-யரிடம் ஒப்புதல் பெற்று, 5.38 லட்சம் ரூபாய் கையாடல் செய்-துள்ளார். இதுதொடர்பான புகாரில், துறை ரீதியான விசாரணை நடந்தது. அதில் குற்றச்சாட்டு உறுதியாக, கிரிதரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.