/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ராசிமணலில் அணை கட்டலாம்' இ.பி.எஸ்.,சிடம் வலியுறுத்தல்
/
'ராசிமணலில் அணை கட்டலாம்' இ.பி.எஸ்.,சிடம் வலியுறுத்தல்
'ராசிமணலில் அணை கட்டலாம்' இ.பி.எஸ்.,சிடம் வலியுறுத்தல்
'ராசிமணலில் அணை கட்டலாம்' இ.பி.எஸ்.,சிடம் வலியுறுத்தல்
ADDED : செப் 02, 2024 02:18 AM
சேலம்: தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர், சேலத்தில் நெடுஞ்-சாலை நகர் இல்லத்தில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் நேற்று மனு அளித்தனர். தொடர்ந்து சங்க பொது செயலாளர் பாண்டியன் அளித்த பேட்டி: தமிழகம் வரும் காவிரி உபரிநீரை தடுத்து நிறுத்தவே, மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகா அரசு முயற்சி செய்து வருகிறது.
அதை தடுத்து காவிரி குறுக்கே ராசிமணலில் அணைகட்டி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பதோடு, உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சட்டரீதியாக அங்கீகாரம்
உள்ளது. இதுதொ-டர்பாக சட்ட சபையில் வலியுறுத்த, இ.பி.எஸ்.,சிடம் மனு அளித்து விளக்கினோம். இது தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.