/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற கடிதம்; சேலம் பல்கலை பதிவாளர் ஆஜராக கண்டிப்பு
/
அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற கடிதம்; சேலம் பல்கலை பதிவாளர் ஆஜராக கண்டிப்பு
அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற கடிதம்; சேலம் பல்கலை பதிவாளர் ஆஜராக கண்டிப்பு
அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற கடிதம்; சேலம் பல்கலை பதிவாளர் ஆஜராக கண்டிப்பு
ADDED : மார் 04, 2025 03:11 AM
சென்னை : 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பப் பெற்றால் தான், பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க முடியும்' என கடிதம் அனுப்பிய, சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் நேரில் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு
சேலம் பெரியார் பல்கலையில், உதவியாளர்களாக பணிபுரிந்த குழந்தைவேல் உள்ளிட்ட பலர், தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி, 2013ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், பணி மூப்பு அடிப்படையில், மனுதாரர்களுக்கு உரிய பதவி உயர்வு மற்றும் அதற்கான பணப்பலன்களை வழங்க, 2017ம் ஆண்டு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சேலம் பெரியார் பல்கலை நிர்வாகம் அமல்படுத்தவில்லை. அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக, குழந்தைவேல் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால் தான், பதவி உயர்வுக்கான பரிந்துரை பட்டியலில் பெயர்களை சேர்க்க முடியும்' என, பல்கலை பதிவாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.
விசாரணை
'எனவே, எந்த நிர்பந்தமும் செய்யாமல், எங்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என்று, குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 'இது தொடர்பாக பெரியார் பல்கலை பதிவாளர், வரும், 7ம் தேதி நேரில் ஆஜராகி, கடிதம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.