/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது காப்பீடு ஊழியர் கோரிக்கை
/
எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது காப்பீடு ஊழியர் கோரிக்கை
எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது காப்பீடு ஊழியர் கோரிக்கை
எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது காப்பீடு ஊழியர் கோரிக்கை
ADDED : ஆக 25, 2024 01:24 AM
எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது
காப்பீடு ஊழியர் கோரிக்கை
சேலம், ஆக. 25-
சேலத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க, 34வது ஆண்டு பொது மாநாடு கோட்ட அளவில் நேற்று நடந்தது. தலைவர் நரசிம்மன் தலைமை வகித்தார்.
அதில் அகில இந்திய பொருளாளர் ரவி பேசுகையில், 'மத்திய அரசு காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை மேலும் உயர்த்தக்
கூடாது. பிரீமியம் மீதான, ஜி.எஸ்.டி.,யை அறவே விலக்கி, காப்பீட்டை பரவலாக்க வழிவகுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வலிமையான சட்டங்களை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தல்; பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்குகளை மத்திய அரசு, மேலும் விற்பனை செய்யக்கூடாது; சட்டசபை, லோக்சபாவில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

