ADDED : செப் 08, 2024 07:27 AM
ஆத்துார், ராணிப்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில், 10 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 75 கிலோ லட்டு படையல் வைத்து வழிபட்டனர்.
சிலைக்கு பூக்கள், மின்விளக்கு அலங்காரம், பணமாலை அணி-வித்து மேளதாளம் முழங்க, ராணிப்பேட்டையில் இருந்து கடை-வீதி, பழையபேட்டை, காமராஜர் சாலை வழியே ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். அதேபோல் ஆத்துார்
வெள்ளை விநாயகர் கோவில் முன் பிரதிஷ்டை செய்த சிலை, முக்கிய வீதிகள் வழியே கொண்டு சென்றனர். ஏராளமான
பக்தர்கள் வழி-பட்டனர்.தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி, செங்கோடனுாரில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.அங்கிருந்து தாரமங்கலம் வழியே பூலாம்பட்டி காவிரியில் கரைக்க, இந்து முன்னணியினர் மாலை, 4:00 மணிக்கு மேல்
சிலையை ஆட்டோவில் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.ரூ.1.25 கோடிக்கு விற்பனைசேலம் மாவட்டத்தில், 13 உழவர் சந்தைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தையையொட்டி நேற்று காலை முதல், உழவர்
சந்தைக-ளுக்கு மக்கள் அதிகளவில் வருகை தந்தனர். இதனால் விற்பனை களைகட்டியது. பூஜைக்கு தேவையான
பழங்கள், வாழை இலை, பூ உள்ளிட்ட காய்கறியை மக்கள் அதிகளவில் வாங்கினர். 262.76 டன் காய்கறி, பழங்கள், 45.64 டன்
பூ உள்ளிட்ட இதர பொருட்கள் மூலம், 1.25 கோடிக்கு விற்பனை நடந்தது.