/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இறைச்சி கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
/
இறைச்சி கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
இறைச்சி கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
இறைச்சி கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
ADDED : ஆக 20, 2024 03:16 AM
வாழப்பாடி: வாழப்பாடியில், இறைச்சி கடையை அகற்றக்கோரி சாலை மறியல் நடந்தது. இதையடுத்து உடனடியாக கடை அகற்றப்பட்டது.
வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து பகுதியில், பாட்டப்பன் கோவில் அருகே நெடுஞ்சாலையோரம் தனியார் நிலத்தில் மாட்டு இறைச்சி கடை செயல்பட்டது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்து, அப்பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை, 5:40 மணிக்கு பேளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார், டவுன் பஞ்., அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின், டவுன் பஞ்சாயத்தில் முறையாக அனுமதி பெறாமல் இறைச்சி கடை செயல்படுவதாக தெரிவித்து, இறைச்சி கடையை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர்.இதுகுறித்து, வாழப்பாடி டவுன் பஞ்., செயல் அலுவலர் கணேசன் கூறுகையில்,'' டவுன் பஞ்., பகுதியில் இறைச்சி கடைகள் மற்றும் சில கடைகள் அனுமதி பெறாமல் நடந்து வருகிறது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.