/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் கடை, சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரேஷன் கடை, சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 14, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், செப். 14-
ஓமலுார் ஒன்றியம் பச்சனம்பட்டி ஊராட்சி திமிரிக்கோட்டையில், ராஜ்யசபா எம்.பி., நிதியில், 13.16 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பெரியேரிப்பட்டி ஊராட்சி அம்மன்கோவில்பட்டியில், 23.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், ஓமலுார் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஜெ., பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.