/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
/
ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
ADDED : ஆக 22, 2024 01:37 AM
ஆசிரியர் மேம்பாட்டு
பயிற்சி வகுப்பு
சேலம், ஆக. 22-
சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் கணினி அறிவியல் துறை, சென்னை, ஐ.சி.டி., அகாடமி சார்பில், ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு, இரு நாட்களாக நடந்தது. 3ம் நாளான நேற்று, நிறைவு விழா நடந்தது. முதல்வர் காந்திமதி தலைமை வகித்தார்.பயிற்சியில் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில் இருந்து, 60 பேராசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலைமைத்துவம், மாணவ, மாணவியரை வகுப்பறையில் கையாள்வது, தலைமை குணங்கள், தலைமை திறன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கணினி அறிவியல் துறைத்தலைவர் ஹேமகீதா, இணை பேராசிரியர்கள் விமலா, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.