/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஐ.,யை பணிபுரிய விடாமல் தடுத்தவர் கைது
/
எஸ்.ஐ.,யை பணிபுரிய விடாமல் தடுத்தவர் கைது
ADDED : ஆக 19, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: வாகனச் சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ.,யை பணிபுரிய விடாமல் தடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., அழ-குதுரை. இவர் உள்ளிட் போலீசார், தாரமங்கலம் - நங்கவள்ளி சாலையில் நேற்று வாகன சோத-னையில் ஈடுபட்டனர். அப்போது சமுத்திரத்தை சேர்ந்த தனபால், 47, வந்தார்.அவர் அழகுதுரை-யிடம், 'மேச்சேரியில் பணியில் இருந்தபோது என் மீது பொய் வழக்கு போட உடந்தையாக இருந்தீர்கள்' என கூறினார். தொடர்ந்து சட்-டையை பிடித்து தள்ளியுள்ளார்.இதுகுறித்து அழகுதுரை புகார்படி, தாரமங்கலம் போலீசார் தனபாலை கைது செய்தனர்.